தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் - செல்போன் கோபுரம் அமைய எதிர்ப்பு
திருவாரூர்: தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடியில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 33ஆவது வார்டு கனகாம்பாள் கோவில் தெருவில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு செல்போன் கோபுரம் அமையும் இடத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, செல்போன் கோபுரம் அமைப்பதற்கு அந்த இடம் தகுதியானது இல்லை எனவும், குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் டவர் அமைத்தால் அதன் கதிர்வீச்சு தாக்கத்தால் மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனவும் கூறி செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.