தூத்துக்குடி : சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவர் வாளுடன் காட்சியளிக்கும் வீடியோ பரவியது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புறநகர் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், முறப்பநாடு அருகே வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த தர்மதுரை (22) என்பவர் அங்குள்ள செல்லியம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாளுடன் பாட்டு பாடி ஆட்டம் போட்டுள்ளார்.
வாளுடன் வீடியோ - இளைஞர் கைது - வசவப்பபுரம்
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே வாளுடன் வீடியோ எடுத்து அதனை இணையத்தில் பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.

வாளுடன் டிக்டாக் வீடியோ - இளைஞர் கைது
வாளுடன் டிக்டாக் வீடியோ - இளைஞர் கைது
அதனை செல்போனில் வீடியோ பதிவு செய்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த வாளையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க :வசந்தபாலன் படத்தில் இணைந்த தொலைக்காட்சி பிரபலம்!