தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது - 5 வாகனங்கள் மீட்பு! - bike robbery man arrested in Tuticorin

தூத்துக்குடி: நகர்ப் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த நபரை, காவல் துறையினர்  கைதுசெய்துள்ளனர்.

கைது
arrest

By

Published : Mar 2, 2021, 6:49 PM IST

தூத்துக்குடி மாவட்டம் மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட டபிள்யு.ஜி.சி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 28ஆம் தேதி நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐந்து இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து திருடுபோயுள்ளன. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் ஆய்வாளர்‌ ஜெயபிரகாஷ், உதவி ஆய்வாளர் ராஜாமணி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், திருநெல்வேலியில் மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த சிவசண்முக வேலாயுதம் (33) என்பவர்தான் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வேலாயுதத்தைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரிடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐந்து இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தனர். மத்திய பாகம் காவல் துறையினரின் துரித நடவடிக்கையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

இதையும் படிங்க:வாகன விபத்தில் மகன் கண் முன்னே தாய் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details