தூத்துக்குடி:தமிழ்நாடு மக்கள் இயக்கத் தலைவர் மள்ளர் காந்தி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்த அவ்வியக்கத்தினர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை சந்தித்து அளித்த மனுவில் ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இது குறித்து மள்ளர் காந்தி செய்தியாளரைச் சந்தித்துக் கூறுகையில், "2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளராக நான் போட்டியிட்டேன். அப்போது தேர்தல் பணிக்காகத் தூத்துக்குடியில் முகாமிட்டிருந்த ராஜேந்திர பாலாஜி, என்னை ஆதரித்து பரப்புரைக்காக வந்திருந்த கமல் ஹாசனை அருவருக்கத்தக்க வகையில் 'நாக்கை அறுத்து விடுவேன்' எனக் கூறியிருந்தார்.