மதுரை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ், பெனிக்ஸ் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் சாமதுரை இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 'சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, தற்போது மதுரை மத்திய சிறையில் இருக்கும் காவலர் சாமதுரையின் தாயார் உயிரிழந்துவிட்டார். தாயாருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டது.