தூத்துக்குடி:சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் மணிமண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மரியாதை - சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மரியாதை...!
தொடர்ந்து, துரை வைகோ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் பல்வேறு அரசியல் கட்சியினர் , பல்வேறு அமைப்பினர் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க:இந்தியினை திணிக்கும் முடிவை கைவிடுக - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்