தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுரோட்டில் நடைபெற்ற காதல் திருமணம்.. - thoothukudi main road marriage

தூத்துக்குடியின் பிரதான சாலையில் நடைபெற்ற காதல் திருமணத்தை அந்த வழியே சென்றவர்கள் ஆர்வமாக பார்த்து சென்றனர்.

நடுரோட்டில் நடைபெற்ற காதல் திருமணம்..
நடுரோட்டில் நடைபெற்ற காதல் திருமணம்..

By

Published : Nov 1, 2022, 9:10 AM IST

தூத்துக்குடி:அண்ணாநகரை சேர்ந்தவர், ஆட்டோ ஓட்டுநர் தினேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகா என்பவரை ஓராண்டாக காதலித்து வந்தார். ஆனால் இருவரும் வேறு வேறு சமுதாயம் என்பதால், கார்த்திகாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் தினேஷின் பெற்றோர் சம்மதத்துடன், தூத்துக்குடி தமிழ்சாலை ரோட்டில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோயிலில் தினேஷ்-கார்த்திகாவின் திருமணம் நடைபெற்றது.

தூத்துக்குடியின் பிரதான சாலையில் உள்ள இசக்கியம்மன் கோயிலில் காதல் திருமணம்

மேலும் அக்கோயிலில் உள்ள ஒரு மூதாட்டி மற்றும் தினேஷின் தாயார் ஆகிய இருவர் மட்டுமே இருந்த நிலையில், நடுரோட்டில் நடைபெற்ற இந்த காதல் திருமணத்தை வாகன ஓட்டிகள் அதிசயமாக பார்த்துச் சென்றனர்.

இதையும் படிங்க:காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கு: கைதான இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details