தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் விவகாரம்; இளைஞரை கொலை செய்த நண்பர்கள் கைது - தூத்துக்குடி

தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் இளைஞரை அவரது நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம்; நண்பனை கொலை செய்த நண்பர்கள்
காதல் விவகாரம்; நண்பனை கொலை செய்த நண்பர்கள்

By

Published : Jul 18, 2022, 7:53 PM IST

தூத்துக்குடி:மதுரை எம்.எம்.காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வெற்றிவேல் (19), கடந்த 5-ம் தேதி முதல் காணவில்லை என தாய் ராணி அவினியாபுரத்திலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெற்றிவேல் நண்பர்களான அஜய் முருகன் (19), மணிகண்டன் (19), ஆகியோர் கடைசியாக வெற்றிவேலை அழைத்து சென்றது தெரிய வந்தது.

கடந்த 30-ம் தேதி அஜய் முருகன் தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வெள்ளாளங்கோட்டை கிராமத்திற்கு வெற்றிவேலை தன் நண்பர் மணிகண்டனுடன் அழைத்து வந்தார். ஊருக்கு வெளியேயுள்ள காட்டுப்பகுதியில் பாழடைந்த கிணற்றுக்கு அருகில் வைத்து அரிவாளால் வெட்டி, கிணற்றுக்குள் தூக்கிவீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து அவனியாபுரம் போலீசார் கொலையாளிகளை வெள்ளாளங்கோட்டை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து, வெற்றிவேல் உடலை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தனர். அஜயை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவரை கடத்தி வந்து கொலை செய்ததாக கூறினார்.

வெற்றிவேல் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் 'பஸ் டே' கொண்டாட்டத்தால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details