தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம்போல் பேட்டையிலுள்ள தனியார் விடுதியில் மாநில லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (டிசம்பர் 14) நடைபெற்றது. அம்மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெகன் பெரியசாமி, செயலாளர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் குமாரசாமி, செயலாளர் வாஸ்னிலி மற்றும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, செங்கோட்டை,கன்னியாகுமரி, சங்கரன்கோவில், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில், வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் வில்லை, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை கட்டாயப்படுத்தும் தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் வரும் 27ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.