தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் தொடரும் கொலை சம்பவங்கள் - அதிகாலையில் லாரி டிரைவர் வெட்டிக் கொலை - தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி: மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் லாரி டிரைவர் வெட்டி கொலை: அதிகாலையில் பயங்கரம்

By

Published : Sep 16, 2019, 1:37 PM IST

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள மேலகூட்டுடன் காடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சொரிமுத்து (36). இவர் தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள லாரி செட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அங்கு ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வள்ளிநாயகம் (36) என்பவர் கிளீனராக உள்ளார்.

இவர்கள் இருவரும் வேலை முடிந்து ஒரே பைக்கில் ராமச்சந்திரபுரத்துக்கு இன்று அதிகாலை சென்றுள்ளனர்.

அங்கு திரு வி.க. நகரைச் சேர்ந்த காளியப்பன், பீட்டர் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த காளியப்பன், பீட்டர் ஆகிய இருவரும் சேர்ந்து சொரிமுத்துவை வெட்டிக்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது

இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று சொரிமுத்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடியில் தொடரும் கொலை சம்பவங்கள் - அதிகாலையில் லாரி டிரைவருக்கு வெட்டு
மேலும், சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

கொலை தொடர்பாக புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி வள்ளிநாயகத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் நேற்று இரட்டை கொலை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதிகாலையில் மீண்டும் ஒரு கொலை நடந்துள்ளது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details