தூத்துக்குடி : தூய பனிமய மாதா பேராலயத்தின் 439ஆம் ஆண்டு 10 நாள் பெருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. 10ஆம் நாள் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சப்பர பவனி இன்று நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு பனிமய மாதாவை தரிசனம் செய்வார்கள். எனவே அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா காரணமாகத் தமிழ்நாடு அரசின் கரோனா வழிகாட்டு அறிவுரைகள்படி பக்தர்கள் பங்கேற்பின்றி பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒவ்வொரு நாளிலும் நடைபெற்றுவரும் நற்கருணை ஆசீர், கூட்டுத் திருப்பலி போன்ற நிகழ்ச்சிகள் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை