தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலுக்காக 3, 450 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்! - தூத்துக்குடி

தூத்துக்குடி: உள்ளாட்சித் தேர்தலுக்காக 3, 450 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

district collector

By

Published : Oct 5, 2019, 5:23 AM IST

Updated : Oct 5, 2019, 8:14 AM IST

தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்துரி வெளியிட, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வி.பி. ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் விஷ்ணு பிரகாஷ், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சந்தீப் நந்தூரி செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் நந்தூரி, "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளான ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, கிராம ஊராட்சி என மொத்தம் 2943 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற பேரூராட்சியில் 294 வார்டுகள், நகராட்சியில் 54 வார்டுகள், மாநகராட்சில் 60 வார்டுகள் என மொத்தம் 408 வார்டுகள் உள்ளன. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 7, 00, 738 ஆண் வாக்காளர்களும், 7, 26, 513 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 89 மூன்றாம் பாலின வாக்காளர்களைச் சேர்த்து மொத்தம் 14, 25, 340 வாக்காளர்கள் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலுக்காக 3, 450 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன" என்றார்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Last Updated : Oct 5, 2019, 8:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details