தூத்துக்குடி: புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு தசரா திருவிழா கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் இன்று (அக். 5) நள்ளிரவு கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ளது.