தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வெம்பூரைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் திதி கொடுப்பதற்காக சிப்பிக்குளத்திற்கு வேனில் சென்றுள்ளனர். விளாத்திக்குளத்தில் உள்ள சல்லிசெட்டிபட்டி கிராமம் அருகே வேன் வந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்து நிறுத்தத்தில் மோதிய வேன்... 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் - kovilpatti accident
கோவில்பட்டி அருகே திதி கொடுக்கச் சென்றவர்கள் வேன் பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், ஒட்டுநர் உட்பட 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
![பேருந்து நிறுத்தத்தில் மோதிய வேன்... 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் kovilpatti van accident 25 injured](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10537145-807-10537145-1612706047858.jpg)
பேருந்து நிறுத்தத்தில் மோதிய விபத்துக்குள்ளான வேன்; 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்
இதில், வேனை ஒட்டிவந்த பன்னீர் செல்வத்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், வேனில் பயணம் செய்த 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க:காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்தவர் மனைவி தற்கொலை!