தூத்துக்குடி :கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி பிரவீனா(30). கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். பிரவீனா கடம்பூரில் உள்ள தனது தந்தை நாராயணன் வீட்டில் இருந்துவருகிறார். பிரவீனா தூத்துக்குடியைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவருடன் இணைந்து பழைய வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவந்துள்ளார்.
தனது தொழில் வளர்ச்சிக்காக கடந்த 2016ஆம் ஆண்டு கயத்தாரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவரும் முருகனிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார். முதலில் ஆறு பைசா வட்டி கொடுத்த வந்த அவர், மீண்டும் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதற்கும் வட்டி கட்டிவந்தநிலையில், 10 பைசா வட்டி கொடுக்க முருகன் வற்புறுத்தியுள்ளார்.
வேறு வழியில்லாமல் பிரவீனா கொடுக்கத்தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் தொழில் முடக்கம் ஏற்பட பிரவீனா வட்டி கொடுக்கமுடியாமல் தவித்துள்ளார். முருகன் வேறு நபரை கைகாட்டி அவரிடம் பணம் பெற்று தனது வட்டியை அடைக்கவேண்டும் எனக்கூறியுள்ளார்.
இக்கட்டான சூழ்நிலையில் தவித்த பிரவீனா, முருகன் கைகாட்டிய நபரிடம் கடன் பெற்று வட்டியை கட்டிவந்துள்ளார். முருகனிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காக அடுத்தடுத்து 48 பேரிடம் இதுபோல் பிரவீனா வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். நாள்வட்டி, வார வட்டி, மாத வட்டி என பல்வேறு வகையில், பணம் கொடுத்தவர்கள் பிரவீனாவிடம் பணத்தை பெற்றுவந்துள்ளனர்.
வெளியில் சொன்னால், அவமானம் ஏற்படுமோ, வட்டிக்கு கொடுத்தவர்கள் தங்களை ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், வெளியே செல்லமுடியாமல் பரிதவித்து வந்த பிரவீனா, தன்னுடைய 100 பவுன் நகைகள், தனது தாயின் 40 பவுன் நகைகளை விற்பனை செய்தும், தனது தந்தையின் சேமிப்பு பணம் ரூ. 20 லட்சம், தனது சகோதரனனின் ரூ. 19 லட்சம் ஆகிவற்றையும் வட்டிப்பணத்திற்காக கொடுத்துள்ளார். இப்படி 16 லட்சம் ரூபாய் கடனுக்காக 3 கோடி ரூபாய் வரை அவர் வட்டிகட்டியுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கந்துவட்டி கும்பல்