தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் நூற்பு ஆலையில் போனஸ் வழங்கக் கோரி ஐஎன்டியூசி தொழிலாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்பு ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - நூற்பு ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே தனியார் நூற்பு ஆலை தொழிலாளர்கள் போனஸ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![நூற்பு ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Labour protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:49:46:1604744386-tn-tut-01-kovilpatti-textile-industries-labour-agitation-vis-script-7204870-07112020154041-0711f-1604743841-377.jpg)
Labour protest
அரசு அறிவித்த 8.33 விழுக்காடு போனஸ் இரண்டு தவணையாக வழங்குவதைக் கண்டித்தும், தொழிலாளருக்கு வருடம்தோறும் பயணப்படி வழங்குவதை ஐந்து மாதங்களாகக் காலதாமதப்படுத்துவதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐஎன்டியூசி தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலை முன்பு கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஐஎன்டியூசி தொழிலாளர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
TAGGED:
நூற்பு ஆலை தொழிலாளர்கள்