தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்க இளங்கோவன் மனைவி கற்பகம்(33). அவரது மகள் தர்ஷினி(7). இருவரும் அக்டோபர் 12ஆம் தேதி சிக்கன் கிரேவி சாப்பிட்டு, குளிர்பானம் குடித்ததால் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியாகின.
இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த காவலர்களின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உயிரிழந்த கற்பகத்தின் செல்போனை காவலர்கள் ஆய்வு செய்ததில், அவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் வீரப்பெருமாள் (34) என்பவர் இருவருக்கு அடிக்கடி போன் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.