தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 7, 2020, 6:52 AM IST

ETV Bharat / state

கோவில்பட்டி பெயிண்டர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது!

தூத்துக்குடி: கோவில்பட்டியில் பெயிண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மூன்று பேரை விரைந்து கைது செய்த தனிப்படை காவலர்களை, காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

murder
murder

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகர் மேட்டுத்தெருவில் கடந்த 5ஆம் தேதி மாலை கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் கோடீஸ்வரன் (வயது 29) என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

இது குறித்து தகவலறிந்த மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோடீஸ்வரன் தந்தை மாடசாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, இறந்த கோடீஸ்வரன் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட நபர் (1)
இந்நிலையில் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி, கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வாளர் அய்யப்பன் தலைமையில், உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், ஸ்டீபன், சிறப்பு சார்பு ஆய்வாளர் நாராயணசாமி, தலைமை காவலர்கள் முருகன், மற்றொரு முருகன், ஆனந்த் அமல்ராஜ், ரமேஷ், ஸ்டீபன் இளையராஜா, காவலர்கள் முகமது மைதீன், ஸ்ரீராம் ஆகியோர் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் (2)
இந்தக் கொலை தொடர்பாக கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமகிருஷ்ணன் (27), சாஸ்திரி நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துக்காளை (24), காசிப்பாண்டி மகன் பாலுக்குட்டி (26) ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன் விரோதத்தில் கோடீஸ்வரனை கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட கோடீஸ்வரனுக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் பல குற்றவியல் வழக்குகளில் சம்மந்தபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளை விரைந்து 12 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
கைது செய்யப்பட்ட நபர் (3)

இதையும் படிங்க:காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை: சாதி பிரச்னையால் நேர்ந்த அவலம்!

ABOUT THE AUTHOR

...view details