தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில்பட்டியில் பயங்கரம்: பெயிண்டர் வெட்டிப் படுகொலை! - thoothukudi crime news

தூத்துக்குடி: கோவில்பட்டியில் பெயிண்டராக வேலை பார்த்துவந்த நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder

By

Published : Aug 5, 2020, 10:04 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோடிஸ்வரன் (30). பெயிண்டராக வேலைசெய்து வந்துள்ளார். இன்று மாலை கோடீஸ்வரன் பாரதிநகர் மேட்டுத்தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

கோடீஸ்வரன்

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி கலை கதிரவன் தலைமையிலான காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஓராண்டுக்கு முன்பு கோடீஸ்வரனுக்கும் கடலையூரைச் சேர்ந்த ராக்கம்மாள் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த கோடீஸ்வரனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:செல்போனுக்காக அக்காவை கொலை செய்த தம்பி கைது!

ABOUT THE AUTHOR

...view details