தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மகராஜா, மாரியப்பன் என்பவர்கள் நேற்று காலை டால் துறை பங்களா தெருவில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.
கோவில்பட்டியில் இருவருக்கு அரிவாள் வெட்டு - போலீசார் தீவிர விசாரணை - kovilpatti attempt to murder
தூத்துக்குடி: கோவில்பட்டியில் இரண்டு பேரை அரிவாளால் வெட்டிச்சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கோவில்பட்டியில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு
கோவில்பட்டியில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மகராஜனை மட்டும் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் பெண் சடலம் மீட்பு: மூட நம்பிக்கைக்காக நிகழ்ந்த உயிர் பலியா?