தூத்துக்குடி:கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் அருகே மாற்றுத்திறனாளி பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் தன்னார்வலர்கள் சார்பில் ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.