தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தாலுகா சட்டப்பணிக்குழு சார்பில் 'கொரோனா வைரஸ்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் கமலவாசன், மருத்துவர் சீனிவாசன், மருந்தியல் துறைப் பேராசிரியர் சத்யபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து, 'கொரோனா வைரஸ்' தாக்கம், அதற்கான அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைத்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.