தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறு லூர்து அன்னை ஆலயத் திருவிழா தேர் பவனி இன்று நடைபெற்றது. கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியது.
பாளையஞ் செட்டிகுளம் பங்குத் தந்தை அந்தோணி ராஜ், கயத்தாறு பங்குத் தந்தை வின்சென்ட் ஆகியோர் தலைமையில் ஒவ்வொரு நாளும் திருப்பலி நடைபெற்றது. இந்தத் திருவிழாவானது 10 நாட்கள் தொடர்ந்தது.
கயத்தாறு லூர்து அன்னை ஆலய தேர்பவனி பத்தாம் நாள் திருவிழாவான இன்று, பாளை மறை வட்ட அதிபர், கே.டி.சி.நகர் பங்குத் தந்தை சார்லஸ் மறையுரை சிந்தனை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அன்னையின் தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவிழா ஏற்பாடுகளை பங்குத் தந்தை வின்சென்ட், திருக்குடும்ப சபை குருக்கள், அமலவை கன்னியர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:கோயில் திருவிழாவில் ஆபாச மேடை நடனம்... நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல் துறை!