தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மார்கழி கோலம் அரசுக்கு எதிரானது' - கடம்பூர் ராஜூ - ஊரக உள்ளாட்சித் தேர்தல்

தூத்துக்குடி: மார்கழி மாதக் கோலம் அரசுக்கு எதிரானது என்பதால்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்தார்.

kadampur-raju
kadampur-raju

By

Published : Dec 31, 2019, 7:53 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சிதம்பரா புரத்தில் தமிழ்நாடு செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "ஜனநாயக முறைப்படி தமிழ்நாடு அரசால் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருவதாகவும், முதல் கட்ட தேர்தலை போல் இரண்டாம் கட்ட தேர்தலும் அமைதியான முறையில் நடக்க அரசு சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். மக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களின் எதிர்ப்பு மூலம் அரசியல் செய்வது தவறு. ஜனநாயக ரீதியாக யார் போராடினாலும் தமிழ்நாடு அரசு ஏற்கிறது. சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட பெண்கள் அனுமதியில்லாமல் செய்ததால் கைது செய்யப்பட்டனர். மேலும், மார்கழி மாதம் கோலம் போட அனுமதி பெறச்சொல்லி கைது செய்யவில்லை" என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் - திமுக மகளிரணி கோலம் வரைந்து எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details