தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் கடத்தல்: தூத்துக்குடி அருகே பரபரப்பு

தூத்துக்குடி அருகே திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இளம்பெண் கடத்தி செல்லப்பட்ட சம்பவத்தால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் காரில் கடத்தல்: தூத்துக்குடி அருகே பரபரப்பு
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் காரில் கடத்தல்: தூத்துக்குடி அருகே பரபரப்பு

By

Published : Sep 13, 2022, 10:53 PM IST

தூத்துக்குடிஅருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த வாரம் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று அவர் மாயமானார். அவர் ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவருடன் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண்ணின் தந்தை, தனது மகளை தூத்துக்குடியைச் சேர்ந்த சோலையப்பன் என்பவர் கடத்திச் சென்று விட்டதாக தட்டப்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகார் குறித்து ”இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி” வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டார் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டனர். பெண்ணை கடத்திய இளைஞரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் கடத்தல்: தூத்துக்குடி அருகே பரபரப்பு

மேலும், இது தொடர்பாக பெண்ணின் தந்தை எஸ்பியிடம் புகார் மனு அளித்தார். இந்த சம்பவம் எஸ்பி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்ததால் என்னை முக்கிய எதிரியாக நினைக்கிறார் ஸ்டாலின் - எஸ்.பி. வேலுமணி

ABOUT THE AUTHOR

...view details