தூத்துக்குடியில் கடந்த 20 வருடங்களாக கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வரும் ஷோபுகாய் ரியூ கராத்தே பள்ளி சார்பில் தென் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியது. ஸ்பிக் நகர் சில்வர் ஜூப்ளி அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியை ஸ்பிக் நிர்வாக மேலாளர் செந்தில் நாயகம் தொடங்கி வைத்தார்.
தென் மண்டல அளவிலான கராத்தே போட்டி: ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு!
தூத்துக்குடி: ஷோபுகாய் ரியூ கராத்தே பள்ளி சார்பில் தென் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
karate match
இந்தப் போட்டியில், தேனி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த 400 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், வெற்றி பெறும் மாணவர்கள் அக்டோபர் மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இப்போட்டிகள் ஆறு வயதிற்கு குறைவானவார்கள், எட்டு வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு வயதின் அடிப்படையில் நடைபெறும். இதைபோல், உடல் எடை அடிப்படையிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது.