தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் கனிமொழி போட்டி - எம்.எல்.ஏ கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடித் தொகுதி வேட்பாளராக கனிமொழி களமிறங்க உள்ளதாக கீதாஜீவன் தெரிவித்துள்ளார்

By

Published : Feb 8, 2019, 2:04 PM IST

Jeevan

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட தாமஸ் நகரில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏ-வுமான கீதாஜீவன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

எளிதாக செய்யக்கூடிய பணிகளை கூட கோவில்பட்டி பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்யததால் மக்கள் கோபத்தில் உள்ளனர். தங்கள் கோபத்தை மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காண்பிக்க உள்ளனர்.

இந்த தொகுதியில் கனிமொழி வேட்பாளராக நிற்க இருக்கிறார்.10 வருடம் எம்.பியாக இருப்பவர். ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். மோடி ஆட்சி கலைந்து, காங்கிரஸ் ஆட்சி அமையும்போது கனிமொழி மத்திய அமைச்சராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பிரதமர் மோடி, வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தும் பணமதிப்பிழப்பு செய்தார். இதனால் பெண்கள் சேமிப்புதான் கரைந்ததே தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை.

ஜிஎஸ்டி-யால் தீப்பெட்டி, பட்டாசு தொழில்கள் அழிந்து விட்டது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. ஜிஎஸ்டியினால் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது என தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மோடி ஆட்சியை மாற்ற வேண்டுமெனில், திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்த நல்ல கூட்டணி அமைந்துள்ளது என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details