தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி தமிழக அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட தொடங்கியுள்ளனர். இதில் தூத்துக்குடி மக்களவை தொகுதி தேர்தலில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின்னர் கனிமொழி முதல் முறையாக இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி வந்த அவருக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மேள தாள முழக்கங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டன.
முதல்முறையாக தூத்துக்குடி தொகுதியை பார்வையிட்ட 'வேட்பாளர்' கனிமொழி
தூத்துக்குடி: திமுக சார்பில் தூத்துக்குடி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கனிமொழி முதல்முறையாக தொகுதிக்கு சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடியில் கனிமொழி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கை விடுபட்ட மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான். இப்போது அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதியே தேர்தல் நடத்த வேண்டும்.தூத்துக்குடியில் வரும் 22ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன்" என தெரிவித்தார்.
இதைதொடர்ந்து அவர், தூத்துக்குடியில் உள்ள முத்துராமலிங்கத்தேவர், பெரியார், அண்ணா உள்பட பல்வேறு தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். போல்பேட்டையில் தி.மு.க.தலைமை தேர்தல் காரியாலயத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்தார்.