தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு மதத்தைப் பற்றி பேசியது தவறு' - கனிமொழி! - திமுக எம்.பி கனிமொழி

தூத்துக்குடி: செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக எம்.பி கனிமொழி, 'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு மதத்தைப் பற்றி பேசியது தவறானது'  என்று கூறியுள்ளார்.

kanimozhi-thoothukudi-press-meet

By

Published : Oct 20, 2019, 3:15 PM IST

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக எம்.பி., கனிமொழி, 'உலக நாடுகளில் சுற்றுச்சூழல் பிரச்னைகளை பிற நாடுகள் எப்படி கையாண்டு இருக்கிறார்கள், எவ்வாறு முன்னெடுகிறார்கள், எவ்வாறு தீர்வு கண்டுபிடிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அங்கு நடந்த கூட்டத்தில் பங்கேற்றது உதவியது. இந்தியாவின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அறிந்துகொள்ள, இந்த வாய்ப்பை வழங்கிய சபாநாயகருக்கும், திமுக தலைவருக்கும் நன்றி’ என்றார்.

மேலும், 'நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவரின் பரப்புரையில் மக்களின் அமோக ஆதரவைப் பார்க்கும் போது, இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் திமுக, காங்கிரஸ் வெற்றி பெறும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக எம்.பி., கனிமொழி செய்தியாளர் சந்திப்பு

'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு மதத்தைப் பற்றி பேசியது தவறானது. அதுவும் பதவியில் இருந்து கொண்டு பேசியது மிகவும் தவறு' என்றும் கனிமொழி கூறினார்.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வேட்பாளர் பெயரை அறிவிப்போம் - பிரேமலதா

ABOUT THE AUTHOR

...view details