ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்த திமுக எம்பி கனிமொழி, புளியங்குளம் பாண்டியராஜா கோயில் அருகிலுள்ள அகழாய்வு குழிகளையும் பார்வையிட்டார். பின்பு அங்கு அமைக்கப்பட்ட உலை போன்ற அமைப்பையும் முதுமக்கள் தாழி அமைந்த இடத்தினையும் ஆய்வு செய்தார்.
அப்போது, ஆதிச்சநல்லூர் தொல்லியல் இயக்குநர் பாஸ்கர், தொல்லியல் ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் ஆய்வுக்களம் குறித்து கனிமொழியிடம் விளக்கினர்.
ஆராய்ச்சியாளர்களுடன் ஆலோசனை நடத்திய கனிமொழியிடம், ஆதிச்சநல்லூரில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், மத்திய தொல்லியல் துறைக்கு உட்பட்ட 114 ஏக்கரில் மாநில அரசை ஆய்வு செய்ய அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவும், மத்திய பட்ஜெட்டில் அறிவித்தப்படி உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் ஆதிச்சநல்லூரில் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.