தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறந்த பொருளாதார வல்லுநர் குழு அமைத்த முதலமைச்சர் - கனிமொழி எம்பி - kanimozhi mp

தமிழ்நாட்டை நிதி நெருக்கடியிலிருந்து மீட்க உலகளவில் பாராட்டு பெற்ற வல்லுநர் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளதாக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்பி
கனிமொழி எம்பி

By

Published : Jul 4, 2021, 7:28 AM IST

தூத்துக்குடி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் சிகிச்சை வசதிக்காக ரூபாய் 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கியை மக்கள் பயன்பாட்டிற்காக மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் நேற்று (ஜூலை 3) ஆம் தேதி தொடங்கி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ் 280 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், காதுகேளாதோருக்கு உதவிடும் வகையில் செல்போன், முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகள் என ஒரு கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, " திமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று திமுக ஆட்சிக்கு வந்ததும் குறைகளை தீர்ப்பேன் என கூறினார்.


இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டதையும் தாண்டி தற்போது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை கருணாநிதி எப்படி நிறைவேற்றினாரோ அதுபோல் மு.க.ஸ்டாலினும் தான் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.

தற்போது தமிழ்நாடு நிதி நெருக்கடியில் இருக்கும் சூழ்நிலையில், உலகளவில் பாராட்டுப் பெற்ற வல்லுநர்களை கொண்ட குழுவை அமைத்து நிதி நெருக்கடி சிக்கலில்லிருந்து மீண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்" என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பெருமாள்தான் வேணுமா; முருகன் வேணாமா - சேகர் பாபு குறித்து பணியாளர்கள் ஆதங்கம்!

ABOUT THE AUTHOR

...view details