தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுமையிலும் கொள்கையை விட்டுக்கொடுக்காதவர்- கருணாநிதி குறித்து கனிமொழி எம்பி நெகிழ்ச்சி

தூத்துக்குடியில் சர்வதேச முதியோர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில், பேசிய கனிமொழி எம்பி, முதுமையிலும், கொள்கையையோ, தனது ஆளுமையையோ விட்டுக்கொடுக்காமல் இருந்தவர் கருணாநிதி என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

kanimozhi-mp-talks-about-karunanidhi-on-international-day-for-older-persons
முதுமையிலும் கொள்கையை விட்டுக்கொடுக்காதவர்- கருணாநிதி குறித்து கனிமொழி எம்பி நெகிழ்ச்சி

By

Published : Oct 9, 2021, 1:03 PM IST

தூத்துக்குடி:சர்வதேச முதியோர் தினம் தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தூத்துக்குடியில் உள்ள ஜான்ஜீகன் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில், கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கு முதியோர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பளித்தனர். இதைத்தொடர்ந்து முதியோர்களின் இசைக் கச்சேரியும், நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தந்தை குறித்து கனிமொழி எம்பி நெகிழ்ச்சி

இவற்றை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் கண்டுகளித்து ரசித்தனர். தொடர்ந்து முதியோர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியதுடன், அனைவருக்கும் சேலை மற்றும் வேட்டிகளையும் அவர்கள் வழங்கினர்.

முதியோர் பாதுகாப்புக் கொள்கை

தெடார்ந்து நிகழ்வில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "முதியோர்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதியோர்கள் பாதுகாப்பு கொள்கை ஒன்றை உருவாக்கி வருகிறார். தமிழ்நாட்டில் தற்போது 75 லட்சம் முதியோர்கள் உள்ளனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் கனிமொழி

இன்னும் 10 ஆண்டுகளில் மேலும் முதியோரின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே, முதியோர்களை பாதுகாக்கும் வகையில் முதியோர் பாதுகாப்பு கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவாக்கி வருகிறார்.

மேலும், முதியோர்களின் நலன்காக்கும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் வீடுதேடிச்சென்று முதியோர்களுக்கு அரசு சிகிச்சை அளித்து வருகிறது" என்றார்.

பேண்ட் இசைக்கச்சேரி

கருணாநிதி குறித்து நெகிழ்ச்சி

இதையடுத்து பேசிய கனிமொழி எம்பி, "முதியோர்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்து பேண்டு வாத்தியம் இசைத்ததை பார்க்கும் போது பிற்காலத்தில் நானும் வீல்சேரில் அமர்ந்து என் வாழ்க்கையை இதுபோன்று வாழ்வேன் என்பதை உணர்த்தியது.

நடன நிகழ்ச்சி

கருணாநிதி சக்கர நாற்காலியில் வாழ்ந்த கால கட்டத்திலும், தனது வாழ்க்கையில் கொள்கையை அரசியல் ஆளுமையை எதையும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர். இதைப் பார்க்கையில், வாழ்க்கையில் எந்த தருணமும் நாம் நேசிக்கக் கூடிய தருணமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது" என்றார்.

இதையும் படிங்க:சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை - கனிமொழி எம்பி

ABOUT THE AUTHOR

...view details