தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேச்சு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் 128 பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கும் நிகழ்வு நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இவ்விழாவில் பேசிய கனிமொழி எம்பி, "தூத்துக்குடி தொகுதி முழுவதுமாக மக்கள் களம் நடத்தபட்டு அதன் மூலமாக மனுக்கள் தேர்வு செய்யபட்ட பயனாளிகளுக்கு இலவச தையல் மிஷன் வழங்கபட்டுள்ளது.
திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பெண்கள் முன்னரே வேண்டும், அரசு வேலையில் அதிக அளவில் பெண்கள் பணிபுரிய வேண்டும் என இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர், கருணாநிதி. பெண்களுக்காக அருகிலே கல்லூரி இருக்க வேண்டும் என்று கல்லூரிகளை அமைத்து கொடுத்து பட்டம் பெற்று வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டு வந்தவர், கருணாநிதி.
இதையும் படிங்க:எம்.பி. ஜெகத்ரட்சகன் : நான்காவது நாளாக தொடரும் வருமானவரி சோதனை! ரூ.16 கோடி சிக்கியதாக தகவல்!
மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை பெண்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. கல்லூரிகளில் பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது திமுக அரசு. பெண்கள் முன்னேற வேண்டும் என்று இயங்க கூடிய ஆட்சி திமுக என்று கூறினால் மிகையாகாது.
பாஜக ஆட்சியில் மணிப்பூரில் பெண்கள் கொடுமை செய்யப்பட்டார்கள். பெண்கள், குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு பாதுகாப்பில்லாமல் முகாமில் தங்கி வரும் நிலைமை தான் மணிப்பூரில் உள்ளது. பெண்கள் முன்னுக்கு வர வேண்டுமென்றால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மத்தியில் ஆளும் பாஜக, பெண்களை மதிப்பதாக கூறிக்கொண்டு வரும் நிலையில், மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். எங்கு என்ன வன்முறை ஏற்பட்டாலும், முதலில் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான் என்பதை ஒவ்வொரு சகோதரர்களும் நினைவில் வைத்துக்கொள்ளவும்" என்று அவர் தெரிவித்தார்ர்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:ஒடிசாவில் நிர்வாணமாக நடந்து சென்ற பழங்குடியின பெண்களை மீட்ட எம்எல்ஏ..! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தகவல்!