தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (32), இந்திய ராணுவத்தில் நாயக் பொறுப்பில் பணியாற்றிவந்தார். திருமணமான இவருக்கு தமயந்தி என்ற மனைவியும் கன்னிகா (7), வைஷ்ணவி (4), பிரதீப் குமார் (1) ஆகிய மூன்று குழந்தைகளும் உள்ளனர். காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் பணியிலிருந்த கருப்பசாமி நேற்று முன்தினம் வாகன விபத்தில் உயிரிழந்தார்.
உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் உடல் நாளை அல்லது நாளை மறுதினம் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி திட்டங்குளத்திற்கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரரின் வீட்டிற்குச் சென்று தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாட்டுக்காக உயிரையும் துச்சமென மதித்து பணியாற்றச் சென்ற ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.