தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா காலத்தில் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வரும் குழப்பங்களை பட்டியலிடவே முடியாது - கனிமொழி - தூத்துக்குடி மாநிலங்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி செய்தியாளர் சந்திப்பு

தூத்துக்குடி: கரோனா தடுப்புப் பணிகளை அதிமுக அரசே தன்னிச்சையாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆட்சியாளர்கள் செயல்படுவது தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநிலங்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி செய்தியாளர் சந்திப்பு
தூத்துக்குடி மாநிலங்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி செய்தியாளர் சந்திப்பு

By

Published : Aug 24, 2020, 2:04 PM IST

Updated : Aug 24, 2020, 3:25 PM IST

திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று (ஆக. 24) தூத்துக்குடி வந்தார்.

தொடர்ந்து அவர், தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளிக்கையில், “தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒரு குழு அமைத்து, அதன் மீதான கருத்து வேறுபாடுகளைரி புத்தக வடிவில் எம்.பி.க்கள் தலைமையில் மத்திய அரசிடம் கொடுத்தோம்.

ஆனால் அதில் கூறிய எந்தக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளாமல் எந்த மாற்றமும் இல்லாமல் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை மீண்டும் கொண்டுவந்துள்ளது. மொழி திணிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் சமூக நீதிக்கு எதிராக மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும்வகையில் தேசிய கல்விக் கொள்கையை கொண்டுவந்துள்ளது.

நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்து. இந்தக் கரோனா காலத்திலாவது ஒரு ஆண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்து அதன் பிறகு முற்றிலுமாக நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கரோனா காலத்தில் தொடர்ந்து ஏற்படுத்தக்கூடிய குழப்பங்களைப் பட்டியலிடவே முடியாது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி செய்தியாளர் சந்திப்பு

தேர்தல் களத்திற்குப் பயன்படுத்தக்கூடிய பரப்புரையாக கரோனா சூழ்நிலைகளைப் பயன்படுத்துகிறார்கள். எல்லா மாநிலங்களிலும், எல்லா கட்சியினர், எதிர்க்கட்சியினர் கூறும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் இணைத்துக் கொண்டுதான் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கூறக்கூடிய ஆலோசனைகளை, கருத்துகளை கேட்டுக் கொள்ளாமல், அதிமுக அரசே இதை தன்னிச்சையாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள், இது தவறு” என்றார்.

இதையும் படிங்க :தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு: எஸ்.வி. சேகர் ஆஜர்!

Last Updated : Aug 24, 2020, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details