தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: பணிகள் துரிதமாக நடைபெறுகின்றது - கனிமொழி எம்.பி., - தூத்துக்குடி அண்மை செய்திகள்

குலேசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் ராக்கெட் ஏவுதளத்திற்காக நிலம் கையப்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

kanimozhi
kanimozhi

By

Published : Jul 12, 2021, 3:42 PM IST

தூத்துக்குடி:சிதம்பரம் நகர் ஆட்ட காலனியில், வஉசி கல்வி கழக சமூக பொறுப்பு பங்களிப்பு நிதியில், ரூ.17.4 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள வகுப்பறைகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., " தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் மேற்கொண்டு செய்யப்பட வேண்டிய பணிகள் தொடங்கும் என நம்புகிறோம்.


டெல்லி செல்லும் போது இதுகுறித்து வலியுறுத்தப்படும்.நிலம் கையகப்படுத்திக் கொடுத்த பின்னரே ஒன்றிய அரசு பணிகளைத் தொடங்க முடியும். அதனால் நிலம் கையகப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது' - கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details