தூத்துக்குடி: மேலஆத்தூர் ஊராட்சி மன்ற மண்டபத்தில் கடந்த 15 நாள்களாக ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று (ஆக 18) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு 30 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள்.
கைவினைப்பொருள்கள்
இந்நிகழ்ச்சியில் கனிமொழி பேசுயதாவது, 'ஆகாயத் தாமரை பொதுவாக ஆறு, நீர் நிலைகளை அழிக்கக்கூடியவை. அதனை மதிப்பு கூட்டும் பொருட்களாக மாற்றிய சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.
புதியதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என மாணவர்கள், குடும்பத் தலைவிகள், வேலையில் இருக்கும் பெண்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். கடந்த கரோனா காலத்தில் நிறைய நபர்களுக்கு வேலையிழப்பு நேர்ந்தது. வேலை இல்லாத நபர்கள் என்ன செய்வதென்று அறியாமல் இருந்தனர்.