தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு நடவடிக்கைகளை தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி இன்று (நவ.19) நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி தனசேகரன் நகர், பி&டி. காலனி, ஜார்ஜ் ரோடு, லசார் தெரு உள்ளிட்ட இடங்களை கனிமொழி பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கனிமொழி இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு ஆண்டு கனமழையின்போதும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது.
இதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் சரியான திட்டமிடல் இல்லை. திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்திருந்தாலே இந்நேரம் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கும்.
கனிமொழி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் பணி உள்ளிட்ட பணிகளை சரியாக திட்டமிட்டு விரைந்து முடிக்க வேண்டும். இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களுடைய படகுகளை மீட்பதற்காகவும் இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கும் மத்திய அரசு அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்” என்றார்.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் உடனிருந்தார்.