தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எதற்காக பனை மரம் வைத்தேன்: கனிமொழி விளக்கம் - தூத்துக்குடி

சென்னை: எதற்காக பனை மரம் வைத்தேன் என தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

kani

By

Published : Apr 15, 2019, 2:02 PM IST

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி வேட்பாளராக களமிறங்குகிறார். இதனையொட்டி அவர் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். இந்த சூழலில் கனிமொழி தனது ட்விட்டர் பக்க கவர் ஃபோட்டோவில் பனை மரம் புகைப்படத்தை வைத்திருக்கிறார்.

ஆனால், தூத்துக்குடியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் பெருவாரியான வாக்குகளை கவர்வதற்காகவே அவர் பனை மரம் புகைப்படத்தை வைத்திருக்கிறார் எனவும், இதுதான் திமுகவின் பெரியாரிய கொள்கையா? எனவும் பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். இதனால் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து கனிமொழி கூறுகையில், “நான் எந்த காலத்திலும் பெரியார் கொள்கையிலிருந்து விலகமாட்டேன். தூத்துக்குடியை பிரதிபலிக்கும் விதமாகவே ட்விட்டர் பக்கத்தில் பனைமர படத்தை வைத்துள்ளேன்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details