தூத்துக்குடி:தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக "வானவில் மன்றம்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவை இணைந்த செயல் திட்டமாகும். இத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும். இதனை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ.28) தொடங்கி வைத்தார்.
அதனடிப்படையில், திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று (நவ.28) தூத்துக்குடி, சிவந்தகுளம் சாலையில் உள்ள சிவந்தாகுளம் பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.