தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா எதிர்ப்பு பணிக்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய கனிமொழி எம்பி

தூத்துக்குடி: கரோனா தடுப்பு பணிகளுக்காக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர்  கனிமொழி எம்பி  kanimoli mp give one crore for corona relief fund
கரோனா எதிர்ப்பு பணிகளுக்காக கனிமொழி எம்பி ரூ.1 கோடி நிதி

By

Published : Mar 30, 2020, 7:20 PM IST

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய்யை ஒதுக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான தற்காப்புக் கருவிகள் வாங்குதல், கரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்குவதாகவும், மேற்கண்ட பணிகளுக்கு நிதியை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

நீதிபதி அருணா ஜெகதீசன்

இதுபோல், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஒரு நபர் கமிஷன் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசனும் கரோனா தடுப்புப் பணிகளுக்காக 50 ஆயிரம் ரூபாய்யை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:‘அனைத்துக் கட்சி ஆதரவையும் திரட்ட வேண்டும்’ - கி. வீரமணி

ABOUT THE AUTHOR

...view details