மக்கள் சுகாதாரமாக இருப்பது குறித்தும், கரானோ வைரஸ் காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம் என்று அரசாங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், விடுமுறை நாளான இன்றைய தினம் பொதுமக்கள் தானாக முன்வந்து ஈடுபடுத்திக்கொண்ட மக்கள் ஊரடங்கு 100 சதவீத அளவில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்படுமோ என்ற அச்ச உணர்வும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மக்கள் ஊரடங்கில் ஈடுபட்டு கை தட்டிய மக்கள் - சேவைகளை வழங்கியவர்களுக்கு மரியாதை
தூத்துக்குடி: மக்கள் ஊரடங்கில் பங்கேற்று அத்தியாவசிய சேவைகளை வழங்கியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கைத்தட்டி பாராட்டு செலுத்தினார், ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்படுமோ என்ற அச்ச உணர்வும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மக்கள் ஊரடங்கில் ஈடுபட்டு கை தட்டிய மக்கள்
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மருத்துவமனை பணியாளர்கள் இணைந்து அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கை தட்டி ஓசை எழுப்பியும், சைரன்களை ஒலிக்கச் செய்தும் பாராட்டு தெரிவித்தனர். இதைப்போல் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகளும் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் இருவருக்கு கரோனா - எண்ணிக்கை 9ஆக உயர்வு!