தூத்துக்குடி:இந்திய பெருந்துறை முகங்களிலே முதன்முதலாக மின்சாரத்தால் இயங்க கூடிய கார்கள் வ.உ.சிதம்பரனார் துறைமுக பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் மின்சாரத்தால் இயங்க கூடிய கார்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
மின்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கக் கூடிய எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் மின்சாரத்தால் இயங்க கூடிய 3 கார்களை வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு வழங்கியுள்ளது. வருங்காலத்தில் 3 இ-கார்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் பேசுகையில், "பல்வேறு பசுமை திட்டங்களை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் செயல்படுத்தி வருகிறது. அண்மையில் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி ஆலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார்.