சர்வதேச மனித உரிமைகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் மனித உரிமைகள் தின விழா தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. இதில், சர்வதேச உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு
மனித உரிமைகள் தின நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ரத்த தான முகாம், இலவச மருத்துவ முகாம் உள்ளிட்டவை நடைபெற்றன. முன்னதாக கரோனா விழிப்புணர்வை வலியுறுத்தி வ.உ. சிதம்பரனார் கல்லூரியிலிருந்து மில்லர்புரத்தில் உள்ள தனியார் பள்ளிவரை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து சுரேஷ் கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.