ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜூன் மாதம் இறுதிவரை ஆக்சிஜன் உற்பத்தி செய்து தமிழ்நாடு மட்டுமின்றி பிற பகுதிகளுக்கும் ஆக்சிஜனை வழங்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
காப்பர் தயாரிப்புக்கான எந்த பணியையும் மேற்கொள்ள கூடாது என அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை கண்காணிப்பதற்காக உள்ளூர் மக்கள் ஒப்புதலுடன் குழு ஒன்றை அமைத்துள்ளது.
அதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் உள்ளிட்ட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.