(kindly use photo inbetween)தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்துவருகிறது
தூத்துக்குடிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை! - heavy rain warning
சென்னை : தூத்துக்குடி மாவட்டத்தில் மிக மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கன மழை பெய்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் காலை 8.30 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் மழை பெய்துவருவதால் பொதுமக்கள் அனாவசியமாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.