தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே வாஞ்சி மணியாச்சி ரயில் நிலைய சந்திப்பில் 75வது சுதந்திர அமிர்த பெருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் சகோதரர் மகன் ஹரிஹர சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வாஞ்சிநாதனின் உருவப்படத்துக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாப அனத், ஹரிஹர சுப்பிரமணியன், அவரது மகன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி அருகே சுதந்திர ரயில் நிலைய வார விழா புகைப்படக் கண்காட்சியில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களது தியாகங்கள் இடம்பெற்றிருந்தன. பின்னர் மதுரை கோட்ட ரயில்வே சாரணர் இயக்கம் சார்பில் வாஞ்சிநாதனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில், முதுநிலை கோட்ட தொலைத்தொடர்பு பொறியாளர் ராம் பிரசாத், கோட்ட பாதுகாப்பு ஆணையர் அன்பரசு மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர். இந்த விழா ஜூலை 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.