தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

75ஆவது சுதந்திர தின விழா... தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து... - 75ஆவது சுதந்திர தின விழா

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படையினர் 24 மணி நேர தீவிர ரோந்து பணியை தொடங்கியுள்ளனர்.

Etv Bharat கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து
Etv Bharat கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து

By

Published : Aug 13, 2022, 9:46 PM IST

தூத்துக்குடி:நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், விமான நிலையம், துறைமுகம் போன்றவைகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

கடலோர பாதுகாப்பு படையினர்ரோந்து

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கடல் சூழ்ந்த மாவட்டம் என்பதால் வேம்பார் முதல் புன்னக்காயல் வரை உள்ள கடல் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினர் இரண்டு அதிநவீன படகுகள் மூலம் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர்.. 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம்..

ABOUT THE AUTHOR

...view details