தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முறைகேடு... முழு விவரம் என்ன? - தூத்துக்குடி மாவட்ட செய்தி

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி 4,410 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 1, 2023, 8:04 AM IST

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி முறைகேடு

தூத்துக்குடி: 1929ஆம் ஆண்டு தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு நாடார் வங்கி என்ற பெயருடன் தொடங்கப்பட்டது, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. தற்போது இந்த வங்கி இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 533 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களுடன் செயல்பட்டு வருகிறது.

வங்கியின் பங்குதாரர்களால் வங்கி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு புதிதல்ல. ஆனால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வங்கியின் தலைமையகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியிருப்பது இதுதான் முதல் முறை.

தூத்துக்குடி, வி.இ.ரோட்டில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு கடந்த 27ஆம் தேதி காலை 10.15 மணியளவில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த வருமான வரித் துறையினர் 16 பேர் கொண்ட நுண்ணறிவுப் பிரிவுக்குழு அதிகாரிகள், 6 வாகனங்களில் வந்தனர்.

அவர்கள் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். வங்கித் தலைமை அலுவலகங்கள் அமைந்திருக்கும் இரண்டு வளாகங்களிலும் உள்ள வங்கியின் முக்கிய அதிகாரிகளிடமும் தீவிர விசாரணை நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கி நிர்வாகம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் சில பரிவர்த்தனைகள் மீது சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் வருமான வரித்துறை சட்டத்தின்கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாகவும் கூறப்பட்டது.

விசாரணையின்போது, வெளி நபர்கள் யாரும் வங்கித் தலைமை அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் வங்கிப் பணியாளர்கள் மட்டும் வழக்கம்போல் உரிய அடையாள அட்டையைக் காண்பித்து அலுவலகத்துக்குள் சென்றனர். மேலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து தூத்துக்குடி தென்பாகம், மத்தியபாகம் போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சோதனை சுமார் 20 மணி நேரம் நடைபெற்ற நிலையில், வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட பைகளில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் அன்றைய தினம் விளக்கக் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ”தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சட்டம் 1961 பிரிவு 285 பி.ஏ.வின் படி சட்ட ரீதியான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு வங்கி முழுமையாக ஒத்துழைப்பு அளித்தது. வருமான வரித்துறை அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு, தொடர்ந்து அனைத்துச் சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்படும். இதனால் வங்கியின் எந்தச் செயல்பாடும் பாதிக்கப்படவில்லை'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி 4,410 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை நேற்று அறிவித்துள்ளது. இதில் கடந்த 27ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள வங்கியின் தலைமை இடத்தில் வருமான வரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த ஐந்து வருடங்களில் கணக்குகளை ஆய்வு செய்தபோது நிதி பரிவர்த்தனை அறிக்கையில் முறையாக கணக்கு காட்டப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

ரொக்க முதலீட்டில் பத்தாயிரம் வங்கி கணக்குகளில் 2,700 கோடி ரூபாய் தொகையும், கிரெடிட் கார்டு தொடர்பான கணக்கு காட்டுதலில் 110 கோடி ரூபாயும், டிவைடெண்ட் முதலீட்டில் 200 கோடியும் மற்றும் பங்குகளில் 600 கோடியும், பொதுமக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய வட்டிகளில் 500 கோடி ரூபாயும் கணக்கு காட்டப்படவில்லை என அறிவிக்கப்ட்டுள்ளது.

இதையும் படிங்க:TNJFU பல்கலைக்கழக முறைகேடு: அரசு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details