தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாறு அய்யனார்வூத்தைச் சேர்ந்த ஒருவர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பியுள்ளார். அவரிடம் நடத்திய பரிசோதனையில் அவருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அய்யனார்வூத்தைச் தனிமைப்படுத்தபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.
இந்நிலையில் அப்பகுதிக்கு மருத்துவக் குழுவினர் குடும்பத்தினருக்குப் பரிசோதனை செய்வதற்காக தாசில்தார் பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோருடன் சென்றனர். அப்போது அவர்களை மக்கள் ஊருக்குள் வரவிடாமல் தடுத்து, நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.
திடீரென மருத்துவக் குழுவினர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் சுகாதார ஆய்வாளர் காளிராஜைத் தாக்கி சட்டையைக் கிழித்து செல்போனை பறித்ததோடு, பைக்கையும் சேதப்படுத்தினர். உடனே சுதாரித்துக் கொண்ட தாசில்தார் பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் மருத்துவக் குழு உதவியுடன் குடும்ப உறுப்பினர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவில்பட்டியில் மருத்துவக் குழுவினர் மீது கொலைவெறி தாக்குதல்! இதுகுறித்து தகவலறிந்த மற்ற மருத்துவத் துறையினர், கயத்தாறு அரசு மருத்துவமனை முன்பு கூடினர். அப்போது, மருத்துவக் குழுவினரைத் தாக்கியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க...கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது!